உதயநிதி, சபரீசனுக்கு செக் வைக்கும் அதிமுக..! வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு பறந்த புகார் கடிதம்

Published : Jun 15, 2023, 09:25 AM ISTUpdated : Jun 15, 2023, 09:27 AM IST
உதயநிதி, சபரீசனுக்கு செக் வைக்கும் அதிமுக..! வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு பறந்த புகார் கடிதம்

சுருக்கம்

30ஆயிரம்  கோடி ரூபாய் ஆடியோ விவகாரம் தொடர்பாக மேல் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, காவல்துறை தலைமை இயக்குனருக்கு அதிமுக சார்பாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிடிஆரின் ஆடியோ மர்மம்

அமைச்சர் பிடிஆர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, காவல்துறை தலைமை இயக்குனருக்கு மீண்டும் புகார் கடிதம் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக வலைத்தளங்களிலும்,

தொலைக்காட்சி ஊடகங்களிலும் பரவலாக ஒரு குரல் பதிவு பகிரப்பட்டது அதில் திரு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சரின் மருமகன் திரு. சபரிசனும் கடந்த ஓராண்டில் முப்பதாயிரம் கோடி முறைகேடாக பணம் ஈட்டி இருப்பதாகவும், 

30 ஆயிரம் கோடி ஊழல் ?

அந்த விவகாரம் பூதாகரமாக இருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்ற வகையில் ஒரு குரல் பதிவு பெருவாரியாக பகிரப்பட்டது. எனவே இந்த குரல் பதிவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் இது திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுடைய குரல் எனும் பட்சத்தில் ஒரு அமைச்சரவையில் சம்பந்தப்பட்டிருக்கிற ஒரு அமைச்சர் மற்றொரு அமைச்சரை தவறான வழியில் பணம் ஈட்டி இருக்கிறார் அதுவும் கனவில் கூட எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு 30 ஆயிரம் கோடி தவறான வழியில் பணம் ஈட்டியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறபோது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 25.4.2023 அன்று மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கும், மத்திய புலனாய்வு துறைக்கும், நான் புகார் மனு அனுப்பி இருந்தேன்.

குரலின் உண்மை தன்மை என்ன.?

அதன் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத போது கடந்த 10.5.2023 அன்று இந்த விவகாரத்தின்/வாக்குமூலத்தின் மீது ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து இந்த முறைகேட்டை, பதவியை தவறாக பயன்படுத்தி பணம் ஈட்டி இருப்பதை நிரூபிக்க வேண்டிய தேவையை கருதி  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், மத்திய நிதித்துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மேல் நடவடிக்கைக்காக புகார் மனுவை அனுப்பி இருந்தேன் அதன் மீதும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.  எனவே இன்று மீண்டும் மேல் நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைக்காக வருமானவரித்துறைக்கும்,

ஐ.டிக்கு கடிதம் எழுதிய அதிமுக

அமலாக்கத்துறைக்கும், காவல்துறை தலைமை இயக்குனருக்கும் உடனடி நடவடிக்கை வேண்டும் என்றும், இது ஒரு மிகப்பெரிய கொடுங் குற்றம் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அப்படி அந்த குரல் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடையது இல்லை எனும் பட்சத்தில் அது போன்ற குரல் பதிவை பதிவு செய்து தமிழக அமைச்சர்களின் மீது குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதையும் கண்டறிந்து அவர் மீதாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் புகார் மனுக்களை பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சிக்கியது எப்படி.? காட்டி கொடுத்தது எது.? வெளியான தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!