ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த மதுசூதனன்... கவச உடை அணிந்து வாக்களிப்பு...!

Published : Apr 06, 2021, 07:49 PM IST
ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த மதுசூதனன்...  கவச உடை அணிந்து வாக்களிப்பு...!

சுருக்கம்

ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கவச உடை அணிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த படி வாக்களித்தார்.

ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கவச உடை அணிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த படி வாக்களித்தார்.

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனையடுத்து, சாதாரண வாக்காளர்கள் வாக்களித்த பிறகு கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், வாக்களிப்பதற்காக மாலை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார். பின்னர், பிபிஇ கிட் அணிந்துவந்து ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ் அவருடன் இருந்தார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!