அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை ரொம்ப சீரியஸ்... மருத்துவமனை நோக்கி விரையும் நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2021, 12:41 PM IST
Highlights

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும்  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும்  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் (வயது 80 )மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன். 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.

click me!