அதிமுகவில் இணைகிறாரா கராத்தே தியாகராஜன்..? அனல்பறக்கும் தமிழக அரசியல் களம்..!

By vinoth kumarFirst Published Aug 29, 2019, 5:44 PM IST
Highlights

இந்தியா பொருளாதாரம் மந்த நிலை தற்காலிகமானது என்றார். அப்போது, கராத்தே தியாகராஜன் அதிமுகவில் சேர்த்து கொள்ளக்கூடாத நபர் அல்ல. சசிகலா, தினகரன் தவிர உலகில் யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம் என்றார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அதிமுகவிற்கு வந்தால் இணைத்துக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் லாரிகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்து லாரிகளை அகற்றச் செய்து மக்கள் பயன்பாட்டுக்காக 30 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், இந்தியா பொருளாதாரம் மந்த நிலை தற்காலிகமானது என்றார். அப்போது, கராத்தே தியாகராஜன் அதிமுகவில் சேர்த்து கொள்ளக்கூடாத நபர் அல்ல. சசிகலா, தினகரன் தவிர உலகில் யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம் என்றார்.

 

 முதல்வர் எடப்பாடி வெளிப்படையாக தாங்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்ததாகவும், பயண விவரங்கள் குறித்து முதலமைச்சர் பயணத்துக்குப் பின் வெளிப்படையாக தெரிவிப்பார் என்றும் கூறினார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்றும், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. நிலை என்றும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கி இந்தியாவுடையது தானே என்ற அவர், ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு பணம் பெற்றதில் என்ன தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

click me!