அதிமுகவின் முன்னால் அமைச்சரும், தற்போது தாமரையை தழுவி கொண்டு மாநிலம் முழுவதும் உலா வரும் பாஜக எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் நாக்கில் எப்போதும் சனிதான்.
அதிமுகவின் முன்னால் அமைச்சரும், தற்போது தாமரையை தழுவி கொண்டு மாநிலம் முழுவதும் உலா வரும் பாஜக எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் நாக்கில் எப்போதும் சனிதான். தடாலடியாக அரசியல் செய்கிறேன் என கூறிக்கொண்டு அவ்வப்போது அதிரடியாக பேசிவிட்டு, பின்னர் ஜகா வாங்குவது நயினாவுக்கு கை வந்த கலை. தமிழகத்தில் ஆண்டாள் பிரச்னை அலை எழுந்தபோது நாக்கை அறுப்பேன் என சவால் விட்டுவிட்டு சூடுபட்டு கொண்ட அவர், இப்போது ‘‘ஆண்மையில்லாத அதிமுக எம்எல்ஏக்கள்’’ என விளாசி தள்ளியுள்ளார்.
தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அதிமுக ஐடிவிங்கை சேர்ந்த ராஜ்சத்யன் ‘ஆண்மை இருந்தால் தனியாக நின்று ஜெயித்து விட்டு வந்து பேசுங்கள். எங்கல் தோள்மீது ஒட்டிக்கொண்டு ஜெயித்து வெற்றிபெற்று விட்டு பேசுவதா? ஆண்மை என்பது பேச்சல்ல. ஒது செயல்’ எனக் கூற பரபரப்பானதைத் தொடர்ந்து உடனடியாக நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அ.தி.மு.க-வைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்கவேண்டுமென்பதே எங்கள் எண்ணம்” என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து பா.ஜ.க-வின் நிலைப்பாடு இல்லை, எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
நெல்லை மாவட்ட அதிமுக தரப்பு நயினார் நாகேந்திரன் மீது கடும் கோபத்தில் இருப்பதோடு, அங்குள்ள மாநில நிர்வாகிகள், அவருக்கு தைரியம் இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனித்து நின்று ஜெயித்து பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளனர். அதிமுக கட்சியினரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காது கொடுக்க முடியாமலும், சொந்த கட்சியினரின் ஆதரவும் இன்றி நொடிந்து போய் வாய்சவடால் எம்எல்ஏ தவியாய் தவிக்கிறார் உளறல் பேச்சால் பிரச்னை ஏதும் வந்துவிடுமோ என பயத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நகர்ப்புறத் தேர்தலில் இதனால் இரு கட்சிக்கும் இடையே உள்ளடி வேலைகள் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாஜகவை சேர்ந்த சில நிர்வாகிகளே நயினார் நாகேந்திரனுக்கு போன் செய்து கொஞ்சம் நாகரீகமாக விசாரிக்க வேண்டாமா? நாம் கூட்டணியில் இருக்கிறோம். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. இதில் சீட் பிரிப்பது முதல் பல விஷயங்களில் நாம் அதிமுகவை சார்ந்த்தே இருக்கிறோம்’’ என அட்வைஸ் செய்தார்களாம். பதிலுக்கு நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. அது குறித்து விளக்கம் அளித்து விட்டேன் என அவர்களை சமாளித்து வருகிறாராம் நயினார் நாகேந்திரன்.