அதிமுக டிரைலருக்கே திமுக அரண்டு கிடக்குது.. மெயின் பிக்சரை இனிதான் பார்ப்பீங்க.. புதிர் போடும் மாஜி அமைச்சர்!

Published : Mar 30, 2022, 09:20 PM IST
அதிமுக டிரைலருக்கே திமுக அரண்டு கிடக்குது.. மெயின் பிக்சரை இனிதான் பார்ப்பீங்க.. புதிர் போடும் மாஜி அமைச்சர்!

சுருக்கம்

 "நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், தாலி இங்கே தங்கம் எங்கே என்று பிரச்சாரம் செய்தவர்கள்தான் திமுகவினர். இன்றைக்கு வரலாறு அப்படியே திரும்புகிறது” 

தமிழக சட்டப்பேரவையில் நாங்க டிரைலரைத்தான் காட்டியுள்ளோம். மானியக் கோரிக்கையின் போது முழு படத்தையும் காட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மெயின் பிக்சர் வருது

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அதிமுகதான் நம்பர் -1 கட்சி. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளும் திமுக பதிலே சொல்ல முடியாத அளவுக்கு எதிர்கட்சி தலைவர் முதல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். தற்போது நாங்க டிரைலரைத்தான் காட்டியுள்ளோம். மானியக்கோரிக்கையின் போது முழு படத்தையும் காட்டுவோம். அதிமுகவின் டிரைலருக்கே திமுக அரண்டு போய் கிடக்கிறது. முழு படம் வரும்போது, அது எவ்வளவு த்ரில்லா இருக்கும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.

திமுக ஆட்சியின் அவலம்

பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களின் கருத்துக்களையும் திமுக ஆட்சி செய்யாத திட்டங்களையும் இந்த ஆட்சியின் அவலங்களையும் சட்டப்பேரவையில் அதிமுக எப்படி எடுத்துரைக்கப் போகிறது என்பதைப் பாருங்கள். திமுகவுக்கு அதிமுகவை தவிர வேறு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதிமுக கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது. நகைக் கடன் தள்ளுபடி பிரச்சினையில் மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். விவசாயிகள் பலருக்கும் பயிர் காப்பீடு தொகை வரவில்லை. எனவே, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட தயராகி வருகிறார்கள். கோவில்பட்டி நகரின் பிரதான தொழில் தீப்பெட்டி தொழில். இதன் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. 

தாலி இங்கே தங்கம் எங்கே?

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது. தங்கத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள் திமுகவினர்தான். 1980-ஆம் ஆண்டில் மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், தாலி இங்கே தங்கம் எங்கே என்று பிரச்சாரம் செய்தவர்கள்தான் திமுகவினர். இன்றைக்கு வரலாறு அப்படியே திரும்புகிறது” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!