கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தலைவராக 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம் 2016ம் ஆண்டு முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவி வகித்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் சிக்கியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தலைவராக 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம் 2016ம் ஆண்டு முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவி வகித்தார். பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்த போது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் டெண்டர் விடும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல்? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!
அந்த டெண்டரில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 5 மணியளவில் பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் இல்லாமல் கூட்டணியா? தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நிச்சயம் அதிர்ச்சியை தரும்.! சீறும் மருது அழகுராஜ்.!
இந்நிலையில் 15 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரிகள் எடுத்து சென்றதை அடுத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.