சிதறும் அமமுக... கதறும் டி.டி.வி... 27-ல் திமுகவில் இணைகிறார் தங்க தமிழ்செல்வன்..?

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 11:10 AM IST
Highlights

அமமுகவின் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்த அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு இருமுனைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் டி.டி.வி.தினகரன் கூடாரம் கதிகலங்கிக் கிடக்கிறது. இந்தநிலையில், அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் வரும், 27-ம் தேதி, தி.மு.க.,வில் இணைய உள்ளதாக வரும் தகவல்கள் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பி வருகிறது. 

அமமுகவின் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்த அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு இருமுனைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் டி.டி.வி.தினகரன் கூடாரம் கதிகலங்கிக் கிடக்கிறது. இந்தநிலையில், அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் வரும், 27-ம் தேதி, தி.மு.க.,வில் இணைய உள்ளதாக வரும் தகவல்கள் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பி வருகிறது. 

டி.டி.வி தினகரனின் வலது கரமாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த வாரம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இதனையடுத்து, அமமுக முக்கிய தலைகளை குறிவைத்து அதிமுக-வும், திமுகவும் தங்களது கட்சியில் இணைக்க பல்வேறு வகைகளில் காய் நகர்த்தி வருகின்றனர். அவர்களை தக்க வைக்க தினகரன் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்து வரும் நிலையில், நேற்று பெங்களூரூ சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்களுடன் சந்தித்தனர். 

ஆனால், மீதமுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. இதன் மூலம் அவர்கள் டி.டி.வி மீது அதிருப்தியில் இருப்பது வெளிப்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட திமுகவும், அதிமுகவும் தீவிரமாக களமிறங்கி டி.டி.வி.அணி ஆதரவாளர்களுக்கு பல ஆஃபர்களை கொடுத்து வருகின்றன. அவர்களது அடுத்த டார்கெட் தங்க தமிழ்செல்வன். செந்தில் பாலாஜி மேற்கு மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளவர் என்றால் தங்க தமிழ்செல்வன் கட்சியையும் தாண்டி அவரது தொகுதியில் வெற்றி பெறும் செல்வாக்கை உடையவர். தென்மாவட்டங்களில் உள்ள கட்சியினருடனும் மதிப்பை பெற்றவர். அடுத்தடுத்து பெரிய தலைகளை கட்சிக்குள் இழுத்து விட்டால் மற்றவர்களை அழைத்து வருவது எளிது எனக் கணக்குப்போட்டு அவர்களை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
எடப்பாடி அணியை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக விமர்சித்து வருபவர் தங்க தமிழ்செல்வன். ஆகையால் அவர் அங்கு செல்வது சந்தேகம். ஆகையால் திமுகவில் அவர் இணைவது உறுதி எனக்கூறுகிறார்கள் அமமுகவினர். தி.மு.க.,வுக்கு, தங்க தமிழ்செல்வன் செல்வதைதடுக்கும் வகையில், அவரை, அ.தி.மு.க.,விற்கு இழுக்கும் முயற்சியில், முதல்வர் பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, கரூரில், வரும், 27ல், ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளது. அப்போது அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ஏழு எம் எல்.ஏ.,க்களும், தி.மு.க.,வில் இணைவர் என்ற பேச்சு பரபரப்பை கிளப்பி வருகிறது.

click me!