தமிழ்நாட்டுக்கே பொழுதுபோக்கு திமுகவும், ஸ்டாலினும் தான்.! பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு!

Published : May 27, 2022, 03:25 PM IST
தமிழ்நாட்டுக்கே பொழுதுபோக்கு திமுகவும், ஸ்டாலினும் தான்.! பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு!

சுருக்கம்

Sellur Raju : கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் வந்து பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து பிரதமர் கலந்து கொண்ட மேடையில் மு.க ஸ்டாலின் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே தான்.

செல்லூர் ராஜு - ஸ்டாலின்

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘மதுரை - தேனி கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று திமுக ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. 

கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் வந்து பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து பிரதமர் கலந்து கொண்ட மேடையில் மு.க ஸ்டாலின் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே தான். கச்சத்தீவு மற்றும் நீட் தேர்வு பிரச்சனைக்கு காரணம் திமுகதான் அவர்களை ஆதரித்தது காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. பா. சிதம்பரத்தின் மனைவி தான் வழக்காடி நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர். 

திமுக ஆட்சி

மாணவச் செல்வங்களின் படிப்பு தற்போது நீட் தேர்வால் பாதிப்படைந்துள்ளது. திமுக ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வி ஆகி விட்டது என்று கூறிய செல்லூர் ராஜூ, பிரதமரிடம் மதுரைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கு திமுகவும், முதலமைச்சரும் தான் என்று நகைச்சுவையாக கூறினார்.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?