பிரதமர் நிகழ்ச்சியா இல்ல திமுக பேரணியா.??? முதல்வரின் பேச்சால் காண்டான எல்.முருகன்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 3:15 PM IST
Highlights

பிரதமரின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிகழ்ச்சியை திமுக பேரணியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

பிரதமரின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிகழ்ச்சியை திமுக பேரணியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் முதல்வரின் செயல்கள் இருந்தது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியின் 31, 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழக அரசு இந்திய அரசின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசு பங்களிக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்ப மத்திய அரசும் நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், நீட் விலக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இந்தி மொழிக்கு இணையாக தமிழை அங்கீகரிக்க வேண்டும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மாநில உரிமைகள் குறித்த அவர் கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல அது சமூக வளர்ச்சியை உள்ளடக்கியதே சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை அடங்கியது இதுதான் திராவிட மாடல் ஆட்சி என உரையாற்றினார். அவரின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த திமுக தொண்டர்கள் விண்ணதிர முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கிருந்த பாஜகவினர் மற்றும் பாஜக தலைவர்கள் நிசப்தத்துடனும் இறுக்கத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில்  இந்நிகழ்ச்சி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பிரதமரை வழியனுப்ப சென்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, பிரதமர் பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அடுத்தகட்ட நிலைக்கு தமிழகத்தை முன்னேற்றுவதற்காக பிரதமர் மோடி வந்துள்ளார்.

ஆனால் அவரை மேடையில் வைத்துக் கொண்டு ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு தமிழக முதல்வர் நடந்து கொண்டது ஒரு சான்று பிரதமர் மோடி இருக்கும் மேடியில் தமிழக முதல்வர் நடந்துகொண்ட விதம், பிரதமர் முன்னிலையில் அவர் பேசிய பேச்சு, அரசியல் நாடகத்தை நடத்தியதை காட்டியுள்ளது. காங்கிரசுடன் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு என்ன தைரியத்தில் முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் வைக்கிறார். அதை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைக்க ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழகம் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் கோடி நிதியை கொடுக்க வேண்டுமே அதை ஏன் முதலமைச்சர் மேடையில் சொல்லவில்லை. தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் பிரித்து பார்த்ததில்லை, முதலமைச்சர் பேசிய அனைத்துமே பொய்.

 

Hon'ble PM Sh. ji launched many developmental projects for Tamilnadu & spoke with pride about rich and

It's disgraceful to see how Sh. has acted inappropriately for the position he holds.

— Dr.L.Murugan (@Murugan_MoS)

முன்னுக்குப்பின் முரணாக தகவல், இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி விட்டு அதை திராவிட மாடல் என்கிறார். ஆளுங்கட்சி காசு கொடுத்து ஆட்களை திரட்டி வந்திருக்கிறது என கடுமையாக விமர்சித்தார். இதே நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும், தமிழக முதலமைச்சர் பேச்சையும் கண்டித்து டுவிட் செய்துள்ளார் அந்த டுவிட் பின்வருமாறு:- வளர்ச்சி திட்டங்களுக்கான நிகழ்ச்சியை திமுக பேரணியாக ஸ்டாலின் மாற்றியிருக்கிறார். பிரதமர் மோடி பங்கேற்று நிகழ்வில் தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளார். 
 

click me!