Thangamani : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு.. 69 இடங்களில் சோதனை

Published : Dec 15, 2021, 07:27 AM IST
Thangamani : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு.. 69 இடங்களில் சோதனை

சுருக்கம்

அதிமுகவை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடந்துள்ளது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. காலை  6:30 முதல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.  அத்துடன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள  தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்ப்பு என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்