”50 கோடி செலவு செய்தாலும் ‘அதிமுக’ வெற்றி பெற முடியாது.. ஓபிஎஸ் - இபிஎஸ்சை அட்டாக் செய்த சி.வி சண்முகம்

By Raghupati R  |  First Published Dec 22, 2021, 7:52 AM IST

‘அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்க விட்டால் ரூ.50 கோடி செலவு செய்தாலும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது’ என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை தனியார் திருமண மண்டப்பத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி. வி சண்முகம், ஓ. எஸ். மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ‘அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்களை ஒன்றினைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்தெடுக்கவேண்டும். நீங்கள் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களை புதிதாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

Latest Videos

இன்னும் நமக்கு சட்டமன்ற தேர்தலுக்கு 4 1/2 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளும் உள்ளது. மக்கள் மனதில் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களிப்பார்கள். ஆனால் எம்எல்ஏ, எம் பி தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி நமக்கு தான் வாக்களிப்பார்கள், ஊராட்சி கிளை கழகத்தை பலப்படுத்தினால் தான் நமது அமைப்பு வலுவான நிலையில் இருக்கும். கிளைக் கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும். 

இல்லையென்றால் ரூ. 50 கோடி கொடுத்தாலும், ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது” என பேசினார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், குட்டி கதை ஒன்று கூறி சசிகலாவை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சிபூசல் நிலவி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் இந்த பேச்சு அதனை உறுதிப்படுத்தும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

click me!