முன்னாள் அதிமுக பெண் எம்எல்ஏ அதிரடி கைது!

Published : Sep 21, 2018, 11:12 AM IST
முன்னாள் அதிமுக பெண் எம்எல்ஏ அதிரடி கைது!

சுருக்கம்

நாமக்கல் மாவட்டம் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. கடந்த 1991ம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. கடந்த 1991ம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கடந்த 2016ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாக சரஸ்வதி பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் மின்துறை அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்த கீரம்பூர் ஊராட்சி கிளை அதிமுக செயலாளர் ராஜா, சரஸ்வதியை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரஸ்வதி, ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாமக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீசார், கொலை மிரட்டல், ஆத்திரமூட்டும் அளவிற்கு உக்கிரத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுதல், பொதுக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துமுன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதியை அவரது வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!