ஓபிஎஸ் சொந்த ஊரில் இப்படி ஒரு நிகழ்வா? கடுப்பான அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா..!

Published : Feb 04, 2022, 11:43 AM IST
ஓபிஎஸ் சொந்த ஊரில் இப்படி ஒரு நிகழ்வா? கடுப்பான அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா..!

சுருக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில், சகுந்தலா என்பவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், தேமுதிகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். 10 மாதங்களுக்கு முன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு இன்னும் உறுப்பினர் அட்டை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு 6வது வார்டில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில் அமமுகவிலிருந்து வந்தவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கியதால் அந்த வார்டு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில், சகுந்தலா என்பவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், தேமுதிகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். 10 மாதங்களுக்கு முன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு இன்னும் உறுப்பினர் அட்டை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு 6வது வார்டில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதை கண்டித்து 6வது வார்டு அதிமுக செயலாளர், இணைச்செயலாளர், பிரதிநிதிகள் மேலவை பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் 9 பேர், கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்து பெரியகுளம் நகரச் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இதில், பெரியகுளம் நகராட்சி 6வது வார்டில் ராஜினாமா செய்தோர் சார்பில் சுயேச்சையாக லட்சுமி என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே, அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!