
புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன். கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் திரைத்துறையில் ஹிட் அடித்து இருக்கிறது. இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், ‘நான் பிறந்து வளர்ந்த இந்த பகுதியில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன். நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதாக’ கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா இரண்டாவதாக வந்தார். மேலும், இவரது அண்ணனான கபிலன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.