சொத்துக்குவிப்பு வழக்கு... 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மேல்முறையீடு..!

By vinoth kumarFirst Published Apr 23, 2021, 6:58 PM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 
 

 சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் ஆர்.பி.பரமசிவம். அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை சின்னசேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பரமசிவம் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடந்த 1997 ஆம் ஆண்டில் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

 

இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு சென்னையிலுள்ள எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மீண்டும் அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைதண்டனை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 1991 மற்றும் 96ஆம் ஆண்டுகளில் அவர் தனது மகன்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதால் தண்டனையை நிறுத்தி ஜாமீன் தரவும் பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!