அப்பாட... தப்பித்தார் கே.என்.நேரு... முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2021, 6:28 PM IST
Highlights

வீடியோ தொடர்பாக, திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பற்றி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான கே.என்.நேரு பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி சர்ச்சையானது. 

வீடியோ தொடர்பாக, திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகார் அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கோரி கே.என்.நேரு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது அரசியல் ஆதாயத்திற்காகப் போடப்பட்ட வழக்கு என கே.என்.நேரு தரப்பில் வாதம் முன்வைக்கபட்ட நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

click me!