அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சாவின் நிலை தனக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜி.?- செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Jun 21, 2023, 2:13 PM IST

பீகார்காரரான ஆளுநர் ரவியையே முதல்வரால் சமாளிக்க முடியவில்லை. பீகாரில் போய் கூட்டணியை ஒருங்கிணைக்க போகிறாராம் முதல்வர் ஸ்டாலின் என ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்


கருணாநிதி பெயர் நீக்கப்படும்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது. மதுரை   ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, 12 கோடியில் கட்ட கலைஞர் கோட்டத்தில் என்ன இருக்கிறது.கருணாநிதி கோட்டத்தை அவரது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் போய் பார்க்க மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றுக்குமே கருணாநிதி பெயரை வைத்து வைத்து பார்க்கிறார்.  

Latest Videos

undefined

ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி

கண்டிப்பாக அதிமுக ஒரு  வருடத்தில் ஆட்சிக்கு வரும் தமிழகத்தில் அனைத்திலும் உள்ள கருணாநிதி பெயரை நீக்குவோம். இதை சவாலாகவே சொல்கிறேன். கருணாநிதி பெயர் இருந்தால் தமிழகத்திற்கு அது கலங்கம் என கடுமையாக விமர்சித்தார். பீகார்காரரான ஆளுநர் ரவியையே முதல்வரால் சமாளிக்க முடியவில்லை. பீகாரில் போய் கூட்டணியை ஒருங்கிணைக்க போகிறாராம் முதல்வர் ஸ்டாலின் என ராஜன் செல்லப்பா விமர்சித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் 7,200 கோடி ரூபாயை ஊழல் செய்து உள்ளார் செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?

மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் ஸ்டாலின் கோபமாக இருக்கிறார்கள். அதனால் தான் குடியரசு தலைவர், பீகார் முதல்வர் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வரவில்லையென தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,  நாள்தோறும் மக்கள் மீது வரி மேல் வரியை முதல்வர் விதிக்கிறார். மக்கள் துன்பப்படுவது முதல்வருக்கு தெரிகிறதா தெரியவில்லையா என்பது தெரியவில்லை. சாலைவரியை கூட முதல்வர் உயர்த்தி உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வறட்சி, பிரச்சனை, நமது உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் விட்டு கொடுத்துவிடுவார்கள். 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகமாக பெற்று தன் தலைவனுக்கு பணத்தை கொண்டு போய் சேர்த்த செந்தில்பாலாஜி இன்று சரியாக மாட்டிக்கொண்டார். பாலாஜி நெஞ்சுவலி என்று சொல்வதெல்லாம் தன்னை பாதுகாத்து கொள்ளத்தான்.

பிடிஆர் வாய் திறந்தால் திமுகவினர் ஜெயிலுக்கு தான்..

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி இந்த நாடக அரங்கேற்றத்தை நடத்துகிறாரா என சந்தேகிக்க தோணுவதாக கூறினார். செந்தில் பாலாஜிக்கு மூன்று மாத ஓய்வு கேட்பது சந்தேகமாக உள்ளது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதயநிதி, சபரீசனின் 30ஆயிரம் கோடி ஊழல் குறித்து வாய் திறக்க மனது வைத்தால் திமுகவினர் ஜெயிலுக்கு போவது உறுதி. அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருப்பதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

டெல்லி செல்லும் ஆளுநர் ரவி..? விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ்- பரபரப்பை கிளப்பும் ஜெயக்குமார்

click me!