அதிமுகவை இப்படி பண்ணீட்டீங்களே? அடுத்த பிளான் இதுதான் - சசிகலா சொன்ன சீக்ரெட் !

By Raghupati RFirst Published Jul 5, 2022, 8:47 PM IST
Highlights

புரட்சித்தலைவரும், புரட்சிதலைவியும் உங்களை மன்னிப்பார்களா ? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் அருகே வி.கே சசிகலா இன்று தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர், ‘சுயநலத்தால் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்னதில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு, நமது கழக தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.

ஏதாவது சூழ்ச்சிகளை செய்து தாங்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக சாதாரண கழகத் தொண்டுகள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது கழக தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம். ஒருசிலரின் அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா ? உங்களுடைய சுய விருப்பு, வெருப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. 

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

சொந்த வீட்டிற்கே சூன்யம் வைத்து விட்டீர்களே. புரட்சித்தலைவரும், புரட்சிதலைவியும் உங்களை மன்னிப்பார்களா ? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது. ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்ய எந்த தொண்டர்களும் மனப்பூர்வவாக விருப்ப வில்லை. 

இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் அதுவே நாம் இரு பெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும். திமுகவினர் நமது இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். 

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது நம் இயக்கம். திமுகவினர்க்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்குது என்ற அம்மாவின் எண்ணம் ஈடேற வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

click me!