நான் சொன்னாதான் கேட்பார்கள்... அமைச்சரை மட்டம் தட்டி பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் தூசி மோகன்..!

Published : Feb 17, 2021, 01:25 PM IST
நான் சொன்னாதான் கேட்பார்கள்... அமைச்சரை மட்டம் தட்டி பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் தூசி மோகன்..!

சுருக்கம்

வந்தவாசி அருகே நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் சேவூர் ராமசந்தினை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வந்தவாசி அருகே நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் சேவூர் ராமசந்தினை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்தின் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் கூட்டத்தில் செல்போனில் பேசிய தொண்டரை கண்டித்தார். 

பின்னர், அமைச்சரவை விட தனது பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறினார். அமைச்சரின் முன்னிலையிலேயே தனது செல்வாக்கை காட்டும் வகையில் மாவட்ட செயலாளர் பேசியது கண்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். இதனடிடையே, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு திட்டமிட்ட நேரத்தை விட 3 மணிநேரம் தாமதமாக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் சென்றுள்ளார். இதனால், நிகழ்ச்சிக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!