தலை குப்புற கவிழ்ந்த அதிமுக.. 60 % வாக்குகளை தட்டி தூக்கிய திமுக.. கட்சியை காலி செய்ய ஓபிஎஸ்-இபிஎஸ்.??

By manimegalai aFirst Published Feb 23, 2022, 11:31 AM IST
Highlights

இதேபோல நகராட்சியில் வார்டு உறுப்பினருக்காக  நடைபெற்ற தேர்தலில் திமுக  61.41 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இந்த நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில்  வெறும் 16.60 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீத வாக்குகளை திமுக கடந்துள்ள நிலையில் வெறும், 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அதிமுக அதளபாதாளத்தில் சரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மினி சட்டமன்ற தேர்தலாக கருத்தப்படும் இந்த தேர்தலில் திமுக ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இது திமுகவின் 9 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரமாகவே கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுகவுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. கொங்கு மண்டலத்தையெல்லாம் திமுகவால் தொட்டுக்கூட பார்க்க முடியாது அது வேலுமணி கோட்டை, எடப்பாடி பழனிச்சாமி தான்  அங்கு கிங் என அதிமுகவினர் மார்தட்டி வந்தநிலையில், வேலுமணி கோட்டையில் ஓட்டை போட்டுள்ளார் செந்நில் பாலாஜி.தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் கொங்கு வெற்றியை சிலாகித்து பேசிவருகிறார். 

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது, ஸ்டாலினும் இதையே கூறியுள்ளார். மொத்தத்தில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி, இந்துமத விரோத கட்சி என்றெல்லாம் பாஜக செய்து வந்த பிரச்சாரங்களும், மறுபுறம் பொங்கல் பரிசு பொருட்களில் ஊழல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக என்றெல்லாம் அதிமுக செய்து வந்த பிரச்சாரங்களும் எடுபடாமல் போயுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மாறாக ஸ்டாலின் மீதும், அவரின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதே இந்த ஏகோபித்த வெற்றிக்கு காரணம் என்றும் பலரும் கூறுகின்றனர். 

இதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சட்டமன்ற தேர்தலை காட்டிலும் திமுக வாக்கு வங்கி அதிகரித்திருப்பதும், அதே நேரத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி அதலபாதாளத்திற்கு சரிந்திருப்பதுதான். இந்த தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சிகளையும், ஆயிரக்கணக்கான பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக 37.70 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. அதிமுக 33.29% சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. மாநகராட்சி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் திமுக  69.07 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக 11.94 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அதலபாதாளத்தில் சரிந்துள்ளது.

இதேபோல நகராட்சியில் வார்டு உறுப்பினருக்காக  நடைபெற்ற தேர்தலில் திமுக  61.41 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இந்த நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில்  வெறும் 16.60 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரையில்  திமுக 57.58 சதவிகித வாக்குகளையும், அதிமுகவை  15.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்திருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிமுக தலைமைகள் சரிவர தேர்தலில் கவனம் செலுத்தாதே இந்த படு வீழ்ச்சிக்கு காரணம் என்றும் பல ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

click me!