பாஜகவே பரவாயில்ல போல..!! ஒத்த ஓட்டு கூட வாங்க முடியாமல் மண்ணை கவ்விய பாமக, நாதக வேட்பாளர்கள்.

Published : Feb 23, 2022, 10:51 AM ISTUpdated : Feb 23, 2022, 08:08 PM IST
பாஜகவே பரவாயில்ல போல..!! ஒத்த ஓட்டு கூட வாங்க முடியாமல் மண்ணை கவ்விய பாமக, நாதக  வேட்பாளர்கள்.

சுருக்கம்

மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்படும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த கொங்கு மண்டலமும் திமுக வசம் வந்துள்ளது. கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதை திமுக பெரும் சாதனையாகவே கருதுகிறது. 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வி அடைந்துள்ளனர். இது அக் கட்சிகளுக்கு  பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 6 வார்டுகளில் போட்டியிட்ட பாமக வெறும் 43 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளது. இது அக்கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய கட்சி தாங்கள் தான் என மார்தட்டிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியும் முதுகுளத்தூரில் ஒரே ஒரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்படும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த கொங்கு மண்டலமும் திமுக வசம் வந்துள்ளது. கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதை திமுக பெரும் சாதனையாகவே கருதுகிறது. கொங்கு மண்டலத்தையெல்லாம் திமுகவால் தொட்டுக்கூட பார்க்க முடியாது அது வேலுமணி கோட்டை, எடப்பாடி பழனிச்சாமி தான்  அங்கு கிங் என அதிமுகவினர் மார்தட்டி வந்தநிலையில், வேலுமணி கோட்டையில் ஓட்டை போட்டுள்ளார் செந்நில் பாலாஜி. தமிழகம் முழுவதும் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தாலும் கொங்கு வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் சிலாகித்துப் பேசிவருகிறார்.

அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டிலிருந்த சேலத்திலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் உள்ள மொத்தம் 60 வார்டுகளில் 49 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தனித்தனியே தேர்தலை சந்தித்த பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிக மோசமான அளவில் படுதோல்வி அடைந்துள்ளனர். அதிலும் சில வேட்பாளர்கள் சில வார்டுகளில் ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வியை தழுவியுள்ளனர். இது அக்கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. வட மாவட்டங்கள் பாமகவின் கோட்டை என அக்காட்சியில் மார்தட்டி வரும் நிலையில், வன்னியர்கள்  அடர்த்தியாக வாழும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பாமக வேட்பாளர் சதாசிவம் ஒரேயொரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியடைந்துள்ளார். 

பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் பாமக 6 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் ஒற்றை இலக்க எண்  ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. ஒரு வார்டில் 31 ஓட்டுகளை மட்டும் பெற்றது, 3வது வார்டில் பூஜ்ஜியம் ஓட்டுகள் என மொத்தம் 43 வாக்குகளை மட்டுமே  பெற்றது. இதனால் போட்டியிட்ட 6 வார்டுகளிலும் பாமக டெபாசிட் இழந்துள்ளது, இரண்டாவது வார்டை சேர்ந்த பாமக வேட்பாளர் சதாசிவம்  ஒரே ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதேபோல் தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது என கூறிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுரை மாவட்டம் பேரையூரில் ஒரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளார். பேரையூர் பேரூராட்சி 14 வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய தமிழ்ச்செல்வன் தன் போட்டியிட்ட வார்டில் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

இதேபோல் திமுகவை கவிழ்க்கப் போகிறோம், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற போகிறோம் என வசனம் பேசி வரும் பாஜக மீண்டும் ஒத்த ஓட்டு பாஜகவாக மாறியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றுள்ளார். இதனால் மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!