இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. அதிரடி காட்டிய ஓபிஎஸ் - இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு !!

Published : Mar 05, 2022, 06:49 AM ISTUpdated : Mar 05, 2022, 07:18 AM IST
இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. அதிரடி காட்டிய ஓபிஎஸ் - இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு !!

சுருக்கம்

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த,  அதிமுக சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். 

இவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது. 

இதில் 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சி தலைமை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினரான செண்பகம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார்.

முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் சின்னமனூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் 7 பேர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நகர்மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததால் சின்னமனூர் 10வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ஜெகதீஸ், 13வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் உமாராணி, 14வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் கவிதா ராணி, 18-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் பிச்சை, 22வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் செல்வி, 26வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் தவசி, சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்