
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பீஸ் போன பல்பு என விமர்சித்த முன்னாள் எம்.பி. சேவல் ஏழுமலையின் மகன் பேசியதை அடுத்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினருமான சேவல் ஏழுமலை தற்போது அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு நீக்கப்பட்டார். தற்போது மகன் மட்டும் அதிமுகவில் விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணைச்செயலாளராக இருந்து வந்தார். சமீபத்தில் செஞ்சியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 74வது பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணைச்செயலாளர் யோகேஸ்வரன்;- விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்தை, பீஸ் போன பல்பு எனவும், பல்புக்குள் தண்ணீர் புகுந்து விட்டது இனி அவரால் வெளிச்சம் தர முடியாது என விமர்சித்தார். அதிமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சரவை கடுமையாக விமர்சித்தது பெரும் பரபரப்வை ஏற்படுத்தியது.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப். இவர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். திடீரென சசிகலா சந்தித்து அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதன் காரணமாக முகமது ஷெரீப், யோகேஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
முகமது ஷெரீப் (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)
சேகர் (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)
ஸ்ரீதர் P.சங்கர் (திண்டிவனம் நகர கழக மாவட்ட பிரதிநிதி)
மஸ்தான் (திண்டிவனம் நகர சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்)
E.யோகேஸ்வரன் (விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர்)
ராஜராணி (கழக பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் செஞ்சி)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருக்கும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.