ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்குமா? கே.சி.பழனிசாமியால் அதிமுகவுக்கு புதிய தலைவலி.!

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 1:56 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை நேற்று கட்சி தலைமை அறிவித்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை நேற்று கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுக தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சி நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்திற்கு எதிராக விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். 

மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கே.சி.பழனிசாமியின் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இன்று மதியம் 2 மணிக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வருகிறது. 

click me!