முதல்வர் ராஜினாமா செய்ய தயாரா..? ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் "ஓபிஎஸ்" !!

Published : Feb 12, 2022, 12:20 PM IST
முதல்வர் ராஜினாமா செய்ய தயாரா..? ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் "ஓபிஎஸ்" !!

சுருக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதற்காக  முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, வரும் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், ‘தமிழகத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத, மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. 

ஆட்சிக்கு வந்து, 10 மாதங்களாகியும் நீட் தேர்வையும், விவசாய கடன், மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்யவில்லை.இப்படி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் வரும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியது, திமுக ஆட்சியாகத் தான் இருக்கும். இதில், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக, விசாரணை குழு அறிக்கை தெரிவிக்கிறது.இதற்காக, முதல்வர் பதவியை, ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா? அடுத்து வரும் தேர்தலில், அதிமுக ஆட்சி அமைக்கும் சாதகமான சூழல் உருவாகி உள்ளது’ என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!