அவருக்கு இது அக்னிப்பரீட்சை... அதிமுக முக்கிய நிர்வாகிக்கு சீட் கொடுத்து செக் வைத்த எடப்பாடி..!

Published : Apr 01, 2021, 11:53 AM IST
அவருக்கு இது அக்னிப்பரீட்சை... அதிமுக முக்கிய நிர்வாகிக்கு சீட் கொடுத்து செக் வைத்த எடப்பாடி..!

சுருக்கம்

என் ஆட்களுக்கு தராமல் போனதால்தான், தோல்வி' என முனுசாமி முணுமுணுப்பார். அதனால், பொறுமையாக இருங்கள்' என சமாதானப்படுத்தி இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓ.பி.எஸுக்கு ஆதரவாக இருந்தார். ஒன்றாக இணைந்தபோது அப்படியே எடப்பாடி ஆதரவாளராக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் இருந்து வருகிறார்.

 ஆனாலும், சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தன் ஆதரவாளர்களான அசோக்குமார், கிருஷ்ணனுக்கு, 'சீட்' வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனால், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தராஜ், தம்பிதுரையின் ஆட்களுக்கு சீட் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விரக்தியில் உள்ளவர்கள் கேட்டபோது, ‘’முனுசாமிக்கு இது அக்னி பரிட்சை. உங்கள் தரப்புக்கு சீட் தந்து, நாளைக்கு தோற்றுவிட்டால், ’என் ஆட்களுக்கு தராமல் போனதால்தான், தோல்வி' என முனுசாமி முணுமுணுப்பார். அதனால், பொறுமையாக இருங்கள்' என சமாதானப்படுத்தி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி