ஓபிஎஸ் ஆட்டம் குளோஸ்? பக்காவாக ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. அசுர பலத்துடன் அதிமுகவை கைப்பற்றுகிறார்..?

By vinoth kumarFirst Published Sep 24, 2020, 7:18 PM IST
Highlights

முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஓபிஎஸ் திட்டத்தை இபிஎஸ் தவிடுபொடியாக்கியுள்ளார்.

முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஓபிஎஸ் திட்டத்தை இபிஎஸ் தவிடுபொடியாக்கியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா வசம் இருந்த அதிமுகவை இரண்டாக உடைத்தவர் ஓபிஎஸ். அதிமுக தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி, ஜெயலலிதா அமைத்து தந்த அதிமுக ஆட்சி அசந்திருந்தால் ஓ.பி.எஸால் கவிழ்க்கப்பட்டிருக்கும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவுக்கு எதிராக பதம் பார்க்கத்துடித்தவர் தானே இந்த ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுக தலைமை பதவிக்கு ஆசைப்படுவதற்கு அவருக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 

கட்சி எனக்கு ஆட்சி உனக்கு என தேர்தல் சமயத்தில் வந்து கோஷம் போடுகிறார் ஓ.பி.எஸ். அவர் தர்மயுத்தம் நடத்தி வெளியேறிய பிறகு அவருடன் வெளியேறிய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்தவர்தானே அவர்? கொஞ்சம் அசத்து இருந்தாலும் அம்மா அமைத்த ஆட்சிக்கு ஆபத்து வந்து இருக்கும். இரட்டை இலையை முடக்கிய ஓ.பி.எஸுக்கு அப்போது துணை முதல்வர் பதவி கொடுத்ததே தேவையற்றதுதான். அன்றைய நிலவரம் கருதியும், சீனியர் என்பதை உணர்ந்தும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. 

அதேபோல், அவரை நம்பி வந்தவர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதற்காக ஓபிஎஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேநேரம் தனது மகன் ரவீந்திரநாத்தை எம்.பி ஆக்கிட்டாரு. தம்பி ராஜா ஆவின் சேர்மனா இருக்கிறார். சம்மந்தி அட்வகேட் ஜெனரல். இதெல்லாம் போதாது என்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைய மகன் பிரதீப்பை எம்.எல். ஏ ஆக்க திட்டமிட்டிருக்கார் என்கின்றனர் கட்சியினர்.

இப்படி குடும்பத்திற்காக மல்லு கட்டுகிறவர், கட்சி வேலைகளில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. 22 தொகுதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒபிஎஸ் சொந்த மாவட்டமான ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதியிலேயே  வெற்றி பெற முடியவில்லை. அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் இதே நிலை தான் ஏற்பட்டது. ஓபிஎஸ்-ன் சமூகமான தேவர் சமூகத்தில் கூட அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஆதரவு எதுவும் இல்லை. ‘தர்மயுத்தம்’ காலத்தில் அவருடன் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ கூட இருந்ததில்லை.

அதேபோல், அரசியலில் காலடிவைத்த ஆரம்ப காலத்தில் அம்மாவின் தீவிர எதிர்ப்பாளராகவே இருந்தார். ஜானகி அணியில் இருந்த காலக்கட்டத்தில் அம்மாவின் உருவபொம்மையை எரித்தார். முதலமைச்சர் பதவியில் தொடர முடியாத சமயத்தில் அம்மா முழு விருப்பத்தோடு ஓபிஎஸ் -ஐ அந்த பதவியில் அமர்த்தவில்லை. சசிகலாவின் அழுத்தம் காரணமாகவே ஓபிஎஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகவே அவர் திரும்பினார். ஓபிஎஸ்க்கு ஆரம்ப கட்டத்தில் டெல்லியில் ஓரளவிற்கு செல்வாக்கு இருந்தது உண்மைதான். ஆனால்,  இப்போது இல்லை.  

அதேநேரம் முதல்வர் எடப்பாடிக்கு தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் அரியர் விவகாரத்தில் எடப்பாடி  அதிரடி காட்டியதையும் டெல்லி மேலிடம் தொடர்ந்து கவனித்து வருகிறது. முக்கிய பிரச்சனைகளில் தங்களுடன் அவர் இணக்கம் காட்டி வருவதையும் அவர்கள் மறக்கவில்லை. ஆக மொத்தத்தில் இபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸா? என்கிற கேள்வி எழும் பட்சத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களின் பெருவாரியான ஆதரவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வலம் வருகிறார். 

click me!