அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர்: அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்தனர். எதற்காக தெரியுமா.?

Published : Sep 24, 2020, 05:16 PM IST
அதிமுக பேனர் விழுந்து பலியான  சுபஸ்ரீயின் பெற்றோர்: அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்தனர். எதற்காக தெரியுமா.?

சுருக்கம்

இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு

வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. பேனர் விழுந்து பலியான  சுபஸ்ரீயின் பெற்றோர், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து துணைநின்றதற்கு நன்றி தெரிவித்தனர். 

கடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் துறை மீது சட்டத்தை முறையாகச் செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்கக் கோரியும் வழக்குத்  தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உடனிருந்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!