அதிமுக திமுக ஒற்றுமையா செய்த சம்பவம்.. ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு தர்ம அடி.. அண்ணன் டா.. தம்பி டா..

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2022, 12:44 PM IST
Highlights

இதனை தொடர்ந்து வேட்பாளர் கவிதா பெருமாளின் ஆதரவாளர்களான சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மாந்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாயை குமார் என்பவரிடம் பணத்தை கொடுத்த பொழுது ஓட்டுக்கு எதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொது மக்களை கூட்டி நால்வரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். 

ஓட்டுக்கு 1000 ரூபாய் வீதம் பணம் விநியோகம் செய்த சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேரை அதிமுக திமுகவினர் சேர்ந்து பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடுத்துள்ளார். இந்த  பரபரப்பு சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838  வார்டுகள் உள்ளன இந்த பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 2.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தத்தில் இது ஒரு மினி சட்டமன்றத் தேர்தலாகவே கருதப்படுகிறது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல அதிமுக - திமுகவுக்குமே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன, இதனால் பன்முனை போட்டி நிலவுகிறது. 

பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன, இதனால் பன்முனை போட்டி நிலவுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 90 க்கும் அதிகமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மற்றும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் பல பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56 வது வார்டு கருமண்டபம் பகுதியில் தீப்பட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் கவிதா பெருமாள் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர் கவிதா பெருமாளின் ஆதரவாளர்களான சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மாந்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாயை குமார் என்பவரிடம் பணத்தை கொடுத்த பொழுது ஓட்டுக்கு எதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொது மக்களை கூட்டி நால்வரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடினர். இதில் சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

மேலும் சுயேட்சை வேட்பாளர் ஆயிரம் ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்ததால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருமண்டபம் பகுதியில் திமுக, அதிமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் படை அதிகாரி ராஜ்குமார் புகாரைப் பெற்றுக்கொண்டு பின்னர் காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால் போராட்டத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டனர்.
 

click me!