தேசநலன்- தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக –பாஜக கூட்டணி தொடரும்... ஓ.பி.எஸ் அறிக்கை..!

Published : Jul 07, 2021, 05:32 PM IST
தேசநலன்- தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக –பாஜக கூட்டணி தொடரும்... ஓ.பி.எஸ் அறிக்கை..!

சுருக்கம்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அதற்கு பாஜக மாநில பொதுச்செயலர் கே.டி.ராகவன், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடருமா என்று சந்தேகம் எழுந்தது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓபிஎஸ் கூடாரத்தை மொத்தமாக வாரி சுருட்டிய திமுக.. இன்று திமுகவில் ஐக்கியமாகும் வைத்திலிங்கம்
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!