6100 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி.. நெல்லுக்கு கூடுதல் விலை… முதலமைச்சர் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Dec 18, 2018, 8:02 PM IST
Highlights

சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் 6 100  கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்த முதலமைச்சர்  பூபேந்திர பாகேல் நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்து அதிரடி காட்டினார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்றதும் இதனை அறிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது வந்தது. அண்மையில் அங்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களைக் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதலமைச்சராக  மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்திர பாகேல் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

பூபேந்திர பாகேல் முதலமைச்சராக பதவியேற்ற பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான விவசாய கடம் தள்ளுபடி என்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும், 2013-ம் ஆண்டு ஜிராமில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

பூபேந்திர பாகேலுடன், அமைச்சர்களா டி.எஸ்.சிங் தியோ, தம்ராஜ்வாத் சாஹு ஆகியோரும் பதவி ஏற்றனர். அதன்பின் புதிய தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  பூபேந்திர பாகேல் அமைச்சர்களுடனும், தலைமைச்செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் கூறியதுபோல் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் . முதல்கட்டமாக 16 லட்சத்து 65 ஆணிரம்  லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், சத்தீஸ்கர் கிராம வங்கியில் நவம்பர் 30-ம் தேதி வரை வாங்கியுள்ள 6 100  கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

இதே போல் மற்ற வங்கிகளிலும் பயிர்க் கடன் விவசாயிகள் பெற்றிருந்தால், அதுகுறித்து வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தும். இந்தக் கடன் தள்ளுபடி மூலம், விவசாயிகளின் பொருளாதார, சமூக நிலை சற்று உயரும். இதற்கான முறைப்படி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர்  பூபேந்திர பாகேல் தெரிவித்தார் .

இரண்டாவதாக நெல்லுக்கு தற்போது ஆதார விலையாக குவிண்டால் ரூ.1,750 வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த ஆதார விலையை ரூ.2,500 ஆக உயர்த்தி இருக்கிறோம். மீதமுள்ள ரூ.750 மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும். தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 போனஸாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 450 ரூபாயை மாநில அரசு நெல்லுக்கு வழங்கும் என்ற முதலமைச்சர்  பூபேந்திர பாகேல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

click me!