7 மணி நேரமாக காத்திருந்தேன் கைது செய்ய ஏன் வரவில்லை? ஸ்டாலினை வான்டடா வம்பிழுக்கும் அண்ணாமலை..?

Published : Mar 30, 2022, 06:41 PM ISTUpdated : Mar 30, 2022, 06:57 PM IST
7 மணி நேரமாக  காத்திருந்தேன் கைது செய்ய ஏன் வரவில்லை? ஸ்டாலினை வான்டடா வம்பிழுக்கும் அண்ணாமலை..?

சுருக்கம்

போலீசார் கைது செய்ய வருவார்கள் என 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததாகவும் ஆனால் போலீசார் வரவே இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

திமுக-பாஜக மோதல்

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவிற்கும் இடையே தொர்ந்து பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். மின்சார வாரியத்தில் பல கோடி ரூபாய் முறை கேடு நடைபெற்றுள்ளதாகவும் இதில் கோபாலபுரத்தை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரம் கெடு விதித்து எச்சரிக்கை விடுத்து இருந்தார் . இதனையடுத்து தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரிய முறைகேடு தொடர்பாக புகார் அளித்து இருந்தார். இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்தும் கருத்து தெரிவித்து இருந்தார்அண்ணாமலை . இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக 610 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி  இருந்தது. இதனால்  கருத்து மோதல் மேலும் அதிகரித்தது.

முடிந்தால் கைது செய்யுங்கள்

கமலாலயத்தில் 6 மணி நேரம் இருப்பேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என அண்ணாமலை  கூறியிருந்தார்.  இதற்கு பதில் அளித்த ஆர்.எஸ் பாரதி, கமலாலயத்தில் நான் 6 மணி நேரம் உட்காரப்போகிறேன். என அண்ணாமலை கூறுகிறார்  இது எப்படி இருக்கிறது என்றால் சினிமாவில் வடிவேலு நான் ஜெயிலுக்கு போகிறேன்,  நான் ஜெயிலுக்கு போகிறேன் என கூறுவது போல் இருப்பதாக தெரிவித்தார். மேலும்  கமலாலயத்தில் போய் உக்கார்ந்துகொண்டு என்னை கைது பண்ணுங்க, என்னை கைது பண்ணுங்க என்கிறார். இவர் ஒரு ஐபிஎஸ் போலீஸ் ஆஃபிசர். இவருக்கு எப்படி ஐபிஎஸ் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாஜக அலுவலகத்தில் மூத்த தலைவர்களோடு அண்ணாமலை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 
திமுகவினர் அரசியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக மோத முடியாமல் பொய் பேசி வருவதாக தெரிவித்தார். தினமும் கட்டுக்கதையை திமுகவினர்  கூறி வருவதாகவும்,  அதற்கு பதில் சொன்னால் மற்றொரு கட்டுக்கதையை கூறிவருவதாக குற்றம்சாட்டினார். எத்தனை முறை பதில் சொல்வது என்று தெரியவில்லை என தெரிவித்தார். 

7 மணி நேரமாக காத்திருந்தேன்

கர்நாடக முதலமைச்சர் சித்தரமையா ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். அவரது ஆட்சியில் 3 மாவட்டங்களில் பணியாற்றியதாகவும் கூறினார்.  இதனை தொடர்ந்து குமாரசாமி தலைமயிலான அரசிலும் தான் பணியாற்றியதாக கூறினார்.  திமுக செய்யும் தவறை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பேன்  என தெரிவித்தார். போலீசார் தன்னை கைது செய்ய வருவார்கள் என 6 மணி நேரம் இல்லை 7 மணி நேரம் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் காத்திருந்ததாக தெரிவித்தார். சென்னையில் டிராபிக் ஜாம் ஆகியிருக்கும் என்பதற்காக 7 மணி நேரம் காத்திருந்தேன் என தெரிவித்தவர், ஆனால் யாரும் வரவில்லையென கூறினார். ஏனென்றால் எந்த புகாரும் தன் மீது இல்லையென தெரிவித்தார். திமுகவினர் மீது தான் ஏராளமான புகார்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!