தேர்தல்கள் முடிந்தவுடன், மம்தா தீதியும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லத் தொடங்குவார்.. அமித்ஷா தாக்கு..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 4:40 PM IST
Highlights

ஏன் நீங்கள் அப்படி உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால் வரும் தேர்தலில் நிச்சயம் நீங்கள் தோல்வி அடைவீர்கள். அந்த தேர்தல் முடிவின் போது நீங்கள் ஜெய்ஸ்ரீராம் என முழங்கப் போகிறீர்கள். 

தேர்தல் முடிவில் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என பேசத் தொடங்குவார் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா மம்தா பானர்ஜியை விமர்சித்துள்ளார்.

தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்க மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நாள் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் எப்படியேனும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவின் முக்கிய தலைவர்களான, மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  அதிரடி கிளப்பி வருகின்றனர். 

 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு யாத்திரை ஒன்றை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா திதி, ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை அவமானகரமான கருதுகிறார், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் வங்காளத்தில்  எழுப்பப்படாவிட்டால் அது பாகிஸ்தானிலா எழுப்பப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்பக் கூடாது என்பதை நீங்கள் எப்படி சொல்ல முடியும், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை அவமானகரமான நீங்கள் உணர்கிறீர்கள், ஏன் நீங்கள் அப்படி உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால் வரும் தேர்தலில் நிச்சயம் நீங்கள் தோல்வி அடைவீர்கள். அந்த தேர்தல் முடிவின் போது நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என முழங்கப்போகிறீர்கள்.  

நீங்கள் ஜெய்ஸ்ரீராமை அவமானமாக கருதுகிறார்கள், ஆனால் நாடு  மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஜெய் ஸ்ரீராம்மை பெருமையாக கருதுகிறார்கள், மம்தா பானர்ஜியின் ஒரே இலக்கு அவரது மருமகனை முதல்வராக ஆக்க வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் அவர்  இவ்வளவு பதறுகிறார். அவர் தோல்விபயத்தில் இருக்குறார் என அமித்ஷா மம்தாவை கடுமையாக தாக்கினார். அமித்ஷா, மம்தா ஆகியோர் மேற்கு வங்கத்தில் உள்ள மாதவா  சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமூகத்தினர் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவாளர்கள் என கருதப்படுகிறது, ஏனெனில் சிஏஏவின் குடியுரிமை வழங்குவதாக அவர்களுக்கு பாஜக உறுதி அளித்துள்ளது. மம்தா பானர்ஜி அவர்களுக்குக் குடியுரிமை அளிப்பதாக உறுதி அளித்திருந்தார், ஆனால் அதை நிறைவேற்றவில்லை, அனைவரும் இந்தியர்கள் தான் அப்படி இருக்க தனியாக எதற்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மம்தா தட்டிக் கழிப்பதாக மம்தாவை பாஜக விமர்சித்து வருகிறது குறிப்பிடதக்கது.  

 

click me!