தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஆதரவு அண்ணாமலைக்கு தான் அதிகம்... ஒரே போடாக போட்ட பாத்திமா அலி..!

By vinoth kumarFirst Published Aug 29, 2021, 5:56 PM IST
Highlights

பாஜகவில் உள்ள பிரச்சனைகளை அண்ணாமலை மிகவும் நேர்த்தியாக கண்டிப்பாக சமாளிப்பார். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக சென்று புகார் கொடுக்கலாம். யாரையும் பாஜக கட்சி தடுக்கவில்லை. மற்ற கட்சிகளை போல் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், பியூட்டி பார்லருக்கு சென்று வயிற்றில் எட்டி உதைக்கும் கலாச்சாரத்தில் வளர்த்த கட்சியல்ல பாஜக கட்சி. 

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்வராக அண்ணாமலை வருவார். அப்படி வரக்கூடிய சூழ்நிலையில் இங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் காணாமல் போகும் என முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி தெரிவித்துள்ளார்.

கே.டி.ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஆதரவாக பாத்திமா அலி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர்;- பாஜகவில் உள்ள பிரச்சனைகளை அண்ணாமலை மிகவும் நேர்த்தியாக கண்டிப்பாக சமாளிப்பார். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக சென்று புகார் கொடுக்கலாம். யாரையும் பாஜக கட்சி தடுக்கவில்லை. மற்ற கட்சிகளை போல் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், பியூட்டி பார்லருக்கு சென்று வயிற்றில் எட்டி உதைக்கும் கலாச்சாரத்தில் வளர்த்த கட்சியல்ல பாஜக கட்சி. 

மேலும், பாஜகவில் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பெண் வாக்காளர்கள்  உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக உள்ளார். இப்படி பெண்களை போற்றுவதிலும், பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பாவிப்பதிலும் முக்கியமான கட்சி பாஜக. பெண்களை பாரத தாயாக பார்ப்பவர்கள். பாரதத்தை நேசிப்பவர்கள் தான் பாஜக கட்சியினர். தேசத்திற்காக தனது பதவியை துறந்துவிட்டு தேச பணியில் ஈடுபட்டிக்கொண்டிருக்கின்ற தலைவர் அண்ணாமலை பற்றி இவர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தலைவர் தவறு செய்திருந்தால் பரவாயில்லை. தலைவர் பேசுவதை திரித்து கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 

தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக கட்சி சிறப்பாக மலரும். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்வராக அண்ணாமலை வருவார். அப்படி வரக்கூடிய சூழ்நிலையில் இங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் காணாமல் போகும். அந்த பயத்தில் தான் இவர்கள் அண்ணாமலையை பார்த்து பயந்து கொண்டு இப்படிப்பட்ட கருத்துகளையும், தேவையில்லாமல் பேசுகின்றனர். புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் போற்றும் தலைவனாக அண்ணாமலை உருவெடுத்துள்ளார் என பாத்திமா அலி கூறியுள்ளார். 

click me!