நான்கு மாதங்களுக்கு பிறகு தரமான சம்பவம்.. துள்ளி குதிக்கும் மதுபிரியர்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2021, 9:43 AM IST
Highlights

அதேபோல்  நான்கு மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய கடற்கரைகளும் இன்று முதல் திறக்கப்படுகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி தளங்களின் மூலம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் திரையரங்கங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்

கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், திரையரங்குகள் திறக்கப்படுகிறது. டாஸ்மார்க பார்களும் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் கொரோன வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அரசு அலுவலங்கள், பள்ளிக்கூடங்கள், போன்ற வற்றை திறப்பதற்கான முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு  ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அந்த உத்தரவில், தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் போன்றவற்றை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் முக்கிய இடங்களை பராமரிக்கும் பணிகள் துரித கதில் நடைபெற்று வந்தது. அதேநேரத்தில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்  நான்கு மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய கடற்கரைகளும் இன்று முதல் திறக்கப்படுகிறது. 

தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி தளங்களின் மூலம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் திரையரங்கங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள்ளாகவே முடங்கிக் கிடந்த பொதுமக்கள், தற்போது பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் பார்கள் திறக்கப்படுவதால் மது பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

click me!