
மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான கவர்ச்சியான அறிவிப்புகள் இல்லை. ஆனால், விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என இந்த பட்ஜெட் குறித்து சில பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில், பட்ஜெட்டிற்கு பிறகு விலை அதிகரித்துள்ள மற்றும் குறைந்துள்ள பொருட்களைத் தெரிந்துகொள்வோம்.
விலை அதிகரித்த பொருட்கள்:
* தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், வைரங்கள் மற்றும் கவரிங் நகைகள், வண்ண ரத்தின கற்கள்
* மொபைல் போன்கள்
* ஆரஞ்ச் மற்றும் சில பழச்சாறுகள், காய்கறிகள்
* கண் கண்ணாடிகள், காலணிகள்
* இறக்குமதி காற்றாடிகள்
* வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள், டாய்லெட் வாசனை திரவியங்கள்
* ஹேர் ரிமூவர் கிரீம்கள்
* சன் ஸ்க்ரீன், மெனிகியூர், பெடிக்கியூர், சன்டான் போன்ற பொருட்கள்
* ஷேவிங் க்ரீம்
* விளையாட்டு சாதனங்கள், விளையாட்டு மற்றும் வீடியோ கேம் உபகரணங்கள்,
* பட்டுத்துணி வகைகள்
* விளையாட்டு உபகரணங்கள்
* சிகரெட், லைட்டர்கள், மெழுகுவர்த்திகள்
* சமையல் மற்றும் ஆலிவ் எண்ணெய்கள்
* புரத உணவு தயாரிப்புகள் (சோயா தவிர)
* வாய்துர்நாற்றத்தை போக்கும் திரவம், பல் கட்டும்போது பயன்படும் பசை மற்றும் பவுடர்கள்
* லாரி மற்றும் பேருந்து ரேடியல் டயர்கள்
* பர்னீச்சர் பொருட்கள், மெத்தைகள்
* எல்.சி.டி. மற்றும் எல்.ஈ.டி. டி.வி. பேனல்கள்
விலை குறைந்த பொருட்கள்:
* பெட்ரோலிய பொருட்கள்
* செங்கல், டைல்ஸ்
* வறுக்கப்படாத முந்திரி
* சோலார் கிளாஸ்கள்
* காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள்
* பால்