8வது நாளிலேயே ராகுலுக்கு இப்படி ஒரு நிலைமையா.? நாளை முழு ஓய்வு.. கலக்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 14, 2022, 5:35 PM IST

8வது நாளாக பாதயாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ள நிலையில் அவரின் கால்களில் கொப்புளங்களை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளை முழுவதும் அவர் ஓய்வெடுப்பார் என பாதயாத்திரை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 


8வது நாளாக பாதயாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ள நிலையில் அவரின் கால்களில் கொப்புளங்களை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளை முழுவதும் அவர் ஓய்வெடுப்பார் என பாதயாத்திரை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. ராகுல் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒருபடி மேலேபோய் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை யாத்திரை தொடங்கியுள்ளார். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போயுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றவும் அவர் இந்நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:  10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் வீடு இல்லை... சென்னையில் வாடகை, பரிதாப நிலையில் சி. விஜயபாஸ்கர்.

180 நாட்கள் 3 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரம் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இப்பயணம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து 7ம் தேதி யாத்திரை தொடங்கியது, தமிழகத்தில் 4 நாட்கள் நடைப்பயணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை ராகுல் மேற்கொண்டு வருகிறார், திருவனந்தபுரம் கணியாபுரத்திலிருந்து பயணம் தொடங்கியது, மழையை பொருட்படுத்தாமல் ராகுல் பாதயாத்திரை குழுவினருடன் வீரு நடை போட்டார், அவருக்கு குடைபிடிக்க உதவியாளர் வந்தபோது, அவரை தடுத்த ராகுல், மழையிலேயே  நடந்தார். அந்த குடையை தன்னுடன் வருபவர்களுக்கு கொடுக்குமாறு கூறினார். 

இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி தினமும் 3 உடைகள் மாற்றுகிறார்.. உங்களுக்கு ராகுலை பற்றிப்பேச தகுதியில்லை.. நாராயணசாமி.

பின்னர் 10:30 மணிக்கு மாமம் எஸ்.எஸ் பூஜா கன்வென்ஷன் சென்டர் அடைந்த அவர், தொண்டர்களுடன் ஓய்வெடுத்தார், பின்னர் மாலை 4 மணிக்கு மாமத்திலிருந்து யாத்திரை தொடங்கியது, இரவு 8 மணிக்கு கல்லம்பலத்தில் நிறைவடைந்தது. அப்போது ஒற்றுமை பயணம் குறித்து ராகுல் கூறுகையில், இந்து மதத்தில் பிரதான வார்த்தை ஓம்சாந்தி, ஆனால் இந்து மதத்தின் காவலர்கள் என கூறிக் கொள்பவர்கள் ஓம் சாந்திக்கு எதிராக செயல்படுகிறார்கள், மதநல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்குகிறார்கள், மக்களை பிளவுபடுத்துகிறார்கள், அதனால்தான் நம் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய யாத்திரை இன்று 8வது நாளை எட்டியுள்ளது தொடர்ந்து எட்டு நாட்களாக ராகுல்காந்தி நடந்து வரும் நிலையில் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், காலில் கொப்புளங்கள் ஏற்படும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என கூறியுள்ளார். ராகுலின் ஒற்றுமை பயணத்தை ஒருங்கிணைக்கும் குழுவினர் ராகுல் காந்தி நாளை ஓய்வு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் அவர் ஓய்வெடுக்க உள்ள நிலையில் நாளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. 
 

 

click me!