21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாமகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ... சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Aug 5, 2019, 10:45 AM IST
Highlights

முன்னாள் எம்.எல்.ஏ.வான பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து விலகி ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து விலகி ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

பாமக தொடங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்த தீரன், 21 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, சிறிது காலம் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.

 

இந்நிலையில், தீரன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை சந்தித்து அந்தக் கட்சியில் மீண்டும் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராமதாஸ் தமிழகத்தில் வன்னியர் சங்கம், பாமக தொடங்கிய காலத்தில், என்னோடு இருந்து கடுமையாக உழைத்தவர் தீரன். அவரது பேச்சு, எழுத்துகள், செயல்களால் பாமக வேகமாக வளர்ச்சி பெற்றது. நாங்கள் இருவரும் பாமகவை கட்டிக்காத்து வளர்த்து வந்தபோது, காலம் எங்களைப் பிரித்தது. அதே காலம் தற்போது எங்களை இணைத்துள்ளது.

 

இனி எந்த சக்தியாலும் எங்களை பிரிக்க முடியாது. அவரது செயல்பாடுகளால் பாமக மேலும் வளர்ச்சி பெறும். விரைவில் அவருக்கு உரிய பதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார். 21 ஆண்டு கால வனவாசத்துக்குப் பிறகு பாமகவுக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற கட்சிகள் போல் அல்லாமல், மக்களுக்கான போராட்ட இயக்கமாக பாமக இருப்பதால்தான் அக்கட்சியில் இணைந்தேன் என்றார். 

click me!