
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும் என கோரி ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பலரும் கூறி வந்ததால் இதுகுறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை கமிஷன் முன், இதுவரை, தி.மு.க., மருத்துவ அணித் தலைவர், டாக்டர் சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர், விமலா... ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர்,
நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, உதவி பேராசிரியர், முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி, விளக்கம் அளித்துள்ளனர்.இந்த விசாரணையில், அரசு டாக்டர் டிட்டோ, தீபா கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜாராகி விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும் என கோரி ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
டிசம்பர் 26 உடன் முடியும் இந்த விசாரணை காலக்கெடுவை நீட்டிக்க கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம்.