சினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சுற்றும் சர்ச்சை..!

By Selva KathirFirst Published May 13, 2021, 12:44 PM IST
Highlights

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஷ் வழங்கிய புகைப்பட பரிசு தொடர்பான நிகழ்வை சினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஷ் வழங்கிய புகைப்பட பரிசு தொடர்பான நிகழ்வை சினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்ற அன்பில் மகேஷ் நேற்று திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மறுமகன் சபரீசனை சந்தித்தார். இவர்களின் சந்திப்பு தினந்தோறும் நடைபெறுவது தான் என்றாலும் இந்த முறை அன்பில் மகேஷ் புகைப்படம் ஒன்றை உதயநிதிக்கு பரிசாக கொடுத்தார். பெரியார், அண்ணா, கலைஞருடன் ஸ்டாலின் இருக்கும் அந்த புகைப்படத்தில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு பிரேம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அது புகைப்படம் அல்ல ஓவியம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அன்பில் மகேஷ் இந்த போட்டோ பிரேமை உதயநிதியிடம் கொடுத்தது தொடர்பாக சினிமா பிஆர்ஓக்கள் பலர் ஒரே மாதிரி ட்வீட் செய்தனர்.

அதாவது உதயநிதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய நினைவுப்பரிசு என்று அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர். நிகில் முருகன் தொடங்கி அண்மையில் சினிமா பிஆர்ஓக்கள் ஆனவர் வரை மட்டும் இல்லாமல் சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், சினிமா வர்த்தம் பற்றி பேசுபவர்கள் என ட்விட்டரில் அதிக பாலோயர்களை கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் உதயநிதி – அன்பில் மகேஷ் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். இது அனைத்தும ஒரே நேரத்தில் நடைபெற்று இருந்தது. பொதுவாக சினிமா பிஆர்ஓக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இன்புளுயன்ஸ்கர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இது போல் புரமோசனல் ட்வீட் போடுவதுண்டு.

இதற்கு என்று பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கும் நபர்களும் உள்ளனர். அந்த வகையில் பணம் கொடுத்து அன்பில் மகேஷ் – உதயநிதிக்கு நினைவுப்பரிசு கொடுத்த நிகழ்வை எதற்காக புரமோட் செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விவாதமு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா கோர தாண்டவமாடி வரகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்களிலேயே கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில அமைச்சரின் நிகழ்வை சினிமா பிஆர்ஓக்கள் மூலம் எதற்காக விளம்பரப்படுத்த வேண்டுமோ?

click me!