மக்கள் கொத்துக் கொத்தாக செத்தும் கொரோனாமேல கொஞ்சம்கூட பயமில்ல..!! 10, 502 பேர் மீது வழக்கு. போலீஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2021, 12:37 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 10 ஆயிரத்து 502 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 9 லட்சத்து 11 ஆயிரத்து 832 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 10 ஆயிரத்து 502 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கொரோனா தாக்கும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அரசு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவமனைகளில்  நோயாளிகள் படுக்கைக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஆக்ஸிஜன் படுக்கைகள் இன்று நோயாளிகள் உயிருக்கு போராடும் கொடூரம் தலைவிரித்தாடுகிறது.  ஆக்சிஜன் வசிதியின்றி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். 

எப்படியேனும் வைரஸ்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும்,  இல்லை என்றால் இன்னும் மோசமானநிலைமைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு எச்சரித்து வருகிறது. ஆனால் இதை பொருட்படுத்தாமல்  பலரும் கொரோனா அச்சமின்றி, வெளியில் சுற்றித்திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் அப்படி விதிமீறிவோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசீலித்து வருகின்றனர். அந்த வகையில்,  

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 10 ஆயிரத்து 502 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 9 லட்சத்து 11 ஆயிரத்து 832 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 489 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 204 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 

click me!