வீட்டை காணோம்... அதிர்ச்சி கிளப்பும் கூலி தொழிலாளி..!

By Thiraviaraj RMFirst Published May 13, 2021, 12:27 PM IST
Highlights

அரசு தனக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.

“கெணத்த காணோம்” திரைப்பட பாணியில், அரசு கட்டிக்கொடுத்த வீட்டை காணவில்லை என்று கூலி தொழிலாளி ஒருவர் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வல்லிபுரம் கிராமத்தில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சண்முகம். இவர் தனக்கு வீடு கட்டித்தரக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியபோது, அதிகாரிகள் கூறியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சண்முகம் ஏற்கனவே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டிவிட்டதாக அதிகாரிகள் கூற திகைத்து நின்றார் சண்முகம். என்ன நடந்தென்று என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பெற்ற ஆவணத்தின் மூலம், அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டு பணத்தை சண்முகத்தின் பேரில் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.

அரசு தனக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.

தற்போது அரசு அதிகாரிகள் ஆவணத்தின்படி சண்முகம் கட்டிவிட்டதாக கூறப்படும் வீடு காணவில்லை. காணாமல் போன சண்முகத்தின் வீட்டை கண்டுபிடித்து தருமா அரசு? எதிர்பாப்புடன் காத்திருக்கிறது சண்முகத்தின் குடும்பம்.

click me!