#BREAKING கொரோனா நிவாரணத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Published : May 13, 2021, 12:13 PM IST
#BREAKING கொரோனா நிவாரணத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சுருக்கம்

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை, கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகையால்,  தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் வரும் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பெருந்தோற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்த நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக திமுக அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?