அதிக இடங்களில் வென்று பட்டையைக் கிளப்பிய அதிமுக !! ஏமாந்து போன திமுக !!

By Selvanayagam PFirst Published Jan 11, 2020, 9:18 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மேறைமுக தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவானது.

கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 515 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.வுக்கு 244 இடங்களிலும், அ.தி.மு.க.வுக்கு 214 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க.வை விட 30 மாவட்ட வார்டு உறுப்பினர்களை பெற்றது.

5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதுபோல தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

அரிவாள் வெட்டு, மோதல்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே இன்று காலை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தலில் அதிமுக அதிக இடங்களை வென்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 26 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களையும் திமுக 12 இடங்களையும் வென்றுள்ளது.

அதிமுக- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்

1.கோவை- சாந்திமதி
2.தேனி -ப்ரீத்தா
3.கரூர்- எம்.எஸ்.கண்ணதாசன்
4.நாமக்கல் - சாரதா
5.ஈரோடு- கே.நவமணி
6.விருதுநகர்-வசந்திமான் ராஜன்
7.கன்னியாகுமரி- மெர்லியண்தாஸ்
8.சேலம்- ரேவதி (பாமக)
9.அரியலூர் – சந்திரசேகர்
10.திருப்பூர் – சத்யபாமா
11.கடலூர் – திருமாறன்
12.புதுக்கோட்டை -ஜெயலட்சுமி
13. தருமபுரி -யசோதா
14. தூத்துக்குடி – சத்யா

திமுக- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
1.தஞ்சாவூர்- உஷா
2.பெரம்பலூர்-ராஜேந்திரன்
3.நீலகிரி- பாந்தோஷ்
4.திருவாரூர்- கோ.பாலசுப்ரமணியன்
5.திருச்சி- ராஜேந்திரன்
6.மதுரை – சூர்யகலா
7.திண்டுக்கல்-பாஸ்கரன்
8. கிருஷ்ணகிரி- மணிமேகலை
9.திருவண்ணாமலை-பார்வதி ஸ்ரீனிவாசன்
10.திருவள்ளூர்- உமா மகேஸ்வரி
11.ராமநாதபுரம்- திசைவீரன்
12.நாகை- அஜிதா

இதே போன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், திமுக 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

click me!