மூவாயிரத்து ஐநூறு போலி திருமணங்களும்! டாக்டர் அன்புமணி ராமதாஸின் கேரக்டரும்: தடதடன்னு கெளம்பும் புது வெவகாரம்.

By Vishnu PriyaFirst Published Jan 11, 2020, 6:34 PM IST
Highlights

’இந்த அலெக்ஸ்பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும்’ என்பது போல் இருபத்து நான்கு மணி நேரமும் கனகனவென பதற்றத்திலேயே இருப்பதுதான் வடக்கு தமிழக மாவட்டங்கள். காரணம், வன்னியர் சமுதாய மக்கள் மற்றும் தலித் சமுதாய மக்களுக்கு இடையிலான பகைதான். 

’இந்த அலெக்ஸ்பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும்’ என்பது போல் இருபத்து நான்கு மணி நேரமும் கனகனவென பதற்றத்திலேயே இருப்பதுதான் வடக்கு தமிழக மாவட்டங்கள். காரணம், வன்னியர் சமுதாய மக்கள் மற்றும் தலித் சமுதாய மக்களுக்கு இடையிலான பகைதான். எந்தப் பக்கம் இருந்து லேசாக உருமல் வந்தாலும் அடுத்த நொடியில் அது மோதல், களேபரமாக பற்றிக் கொண்டு எரிய துவங்கிவிடும். இதுவரையில் அப்படி எரிந்ததில் பொசுங்கிச் சாம்பலான உடமைகளும், உயிர்களும் ஏராளம், தாராளம்.

போர் களத்தின் நடுவில் ஒரு பூ பூத்துவிட்டால்  சூழல் மாறிவிடும்! என்பார்கள். அந்த வகையில் இரு சமுதாயத்துக்கும் இடையில் காதல் - கலப்பு திருமணங்கள் உருவாகிவிட்டால் சூழ்நிலை சுகப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ். ‘நாடக காதல்’ எனும் புதிய கான்செப்ட் உருவாகி, அது கெளரவ கொலைகளில் முடிந்தோ அல்லது கலவரங்களை தூண்டியோ அடுத்த பஞ்சாயத்து பிய்த்துக் கொண்டு போக துவங்கிவிடுகிறது. 

கடந்த சில வருடங்களாகவே வடக்கு மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் இவ்விரு சமூக மக்களுக்கும் இடையில் பற்றி எரிவது இந்த ‘நாடக காதல்’ விவகாரங்கள்தான். 

இந்த நிலையில்தான் ‘திரெளபதி’ எனும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு, ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக கடுமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தப் படமானது முழுக்க முழுக்க தலித் மக்களை மிக வன்மையாக சாடுவதோடு, வன்னியர்களின் புகழ் பாடும் திரைப்படமாக அமைந்துள்ளது! இந்தப் படத்தில் நீல நிற சட்டை அணிந்து வரும் நபரின் கதாபாத்திரமானது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரை அவமதிக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது! என்று கிளம்பியிருக்கும் விமர்சனங்கள்தான். 

அதேபோல் இந்தப் படத்தினை தாங்கிப் பிடிக்கும் சிலம்ப வாத்தியார் கதாபாத்திரத்தில் அஜித்குமாரின் மச்சான் ரிச்சர்ட் நடித்துள்ளார். இவரது கேரக்டரானது பா.ம.க.வின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது! அவரைப் போலவே செக்கச் சிவந்த நிறம், முக அமைப்பு,  தோரணைப் பேச்சு! என்று அவரை போற்றும் விதமாகவே இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சமூக வலைதளங்களில் ஒரு டீம் கிளப்பியிருக்கிறது. 

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! என்று தலித் சமூக போராளி அரசியல் தலைவர்களும், சினிமா இயக்குநர்களும் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில், இப்படம் ஏன், எப்படி உருவானது? என்பது பற்றிப் பேசும் அதன் இயக்குநரான மோகன்.

“எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிரான படமில்லை இது. அதேபோல நான் எந்த அரசியல் தலைவரையும் இமிடேட் செய்து கேரக்டர் உருவாக்கவில்லை, காட்சியும் அமைக்கவில்லை. 

திரெளபதி படம் உருவாக முக்கிய காரணமே, 2013 - 2014 ஆம் ஆண்டுகளில் சென்னை ராயபுரம் பகுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தம் மூவாயிரத்து ஐநூறு போலித் திருமணங்கள் நடைபெற்றது எனும் செய்திதான். அதையே கதைக்களமாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளேன், அவ்வளவுதான். ஆனால் நான் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் என்னவெல்லாமோ கதைகட்டி விடுகின்றனர். 

பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட படமென்பதால் தமிழக மக்கள் கட்டாயமாக இப்படத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்!” என்று சொல்லியுள்ளார். 
படம் எப்ப ரிலீஸ் பண்றீங்க பாஸு!?
 

click me!