உங்களுக்கு 2 சீட்தான் !! தேமுதிகவிடம் ஸ்ரிக்ட்டா சொல்லிவிட்ட எடப்பாடி பழனிசாமி !! கைவிரித்த பாஜக !!

By Selvanayagam PFirst Published Mar 8, 2019, 7:23 AM IST
Highlights

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்றால் 2 சீட்கள் தான் கொடுக்கப்படும் என்றும் இஷ்டம் இருந்தால் கூட்டணியில் சேரலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுதீசிடம் தெளிவாக கூறப்பட்டு விட்டதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் அக்கட்சி 20 இடங்களிலும், மீதமுள்ள 20 இடங்களில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடது சாரிகள் போட்டியிடுகின்றன, அந்த கூட்டணியைப் பொறுத்தவரை கதவுகள் மூடப்பட்டுவிட்டன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றள்ள நிலையில் எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது ஒரு புறம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூட்டணி பேசிக் கொண்டே , தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரை முருகனிடம் கூட்டணி பேசினார். ஆனால் திமுக இப்பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியாது என்று  கைவிரித்துவிட்டது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தேமுதிக மீதான நம்கத்தன்மையை குலைக்கும் விதமாக இருந்ததால் அதிமுக மற்றும் பாஜக அதிர்ச்சி அடைந்தன.

இதையடுத்து தேமுதிகவுக்கு அதிமுகவுடன் கூட்டணி சேர்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த கட்சிக்கு 2 சீட்கள் தான் கொடுக்கப்படும் என அதிமுக சார்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இது குறித்து பாஜகவின் கவலை என்னவென்றால், நாம் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டால் அவர்கள் அமமுகவிடம் ஐக்கியமாகிவிடக் கூடாது என்பதுதான். இதன் மூலம் கணிசமான ஓட்டுகளை அக்கட்சி பிரித்துவிட்டால் அது அதிமுக கூட்டணிக்குத்தான் பாதிப்பு என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

]

ஆனாலும் தேமுதிக தினரனுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்பதால், தேமுதிகவுக்கு 2 சீட்தான் என்பதை அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன செய்யப் போகிறது தேமுதிக என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி ?

click me!