டயர் நக்கி என்று சொன்னவர்களை டயர் பின்னால் ஒடிவர வைத்தவர் எடப்பாடி..!! ஐயா, சின்னையாவை அசிங்கப்படுத்திய அதிமுக செய்தி தொடர்பாளர்..!!

Published : Nov 24, 2019, 01:18 PM IST
டயர் நக்கி என்று சொன்னவர்களை டயர் பின்னால் ஒடிவர வைத்தவர் எடப்பாடி..!!  ஐயா, சின்னையாவை அசிங்கப்படுத்திய அதிமுக செய்தி தொடர்பாளர்..!!

சுருக்கம்

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதிமுகவின் ஆதரவாளராக பங்கேற்ற அதிமுக செய்தித்தொடர்பாளர் டாக்டர் சமரசம். விவாதத்தில்  பேசிக்கொண்டிருந்த போது  இடையே, '' டயர் நக்கி என சொன்னவர்களையே டயர் பின்னால் ஓடி வர வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுக பிரமுகர் டயர் நக்கி டயலாக்கை வைத்து  பாமக தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை பாமக கடுமையாக விமர்சித்து வந்தது,  பாமகவின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ்,  மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடிவந்தனர்.  

தமிழகத்தில் முட்டாள்களின் ஆட்சி நடக்கிறது, கலெக்ஷன் ஆட்சி நடைபெறுகிறது,   என்பதுபோல் அவர்கள்  விமர்சித்து வந்தனர்.  அத்துடன் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது பாமக, அதில் பேசிய அன்புமணி ராமதாஸ்  அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை "டயர் நக்கி" என கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதன்பின்னர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏழு மக்களவைத் தொகுதிகளையும்,  ஒரு  மாநிலங்களவை தொகுதியையும் பெற்று அதிமுகவுடன் பாமக சமரசம் ஆனது .  ஆனாலும்கூட கூட்டணிக்குள் எப்போதும் சலசலப்பு இருந்துவருகிறது.  இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதிமுகவின் ஆதரவாளராக பங்கேற்ற அதிமுக செய்தித்தொடர்பாளர் டாக்டர் சமரசம். விவாதத்தில்  பேசிக்கொண்டிருந்த போது  இடையே, '' டயர் நக்கி என சொன்னவர்களையே டயர் பின்னால் ஓடி வர வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

அது அங்கிருந்தவர்களை ஆச்சிரியப்பட வைத்தது, கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி வெளிப்படையாக பேசுகிறாரை என ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதாவது,  டயர் நக்கி சொல்லாடலை வைத்து பாமக தலைவர்களை கிண்டலடித்த  அதிமுக பிரமுகர் சமரசம்,  நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக,  தேமுதிக,  பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மேயர் சீட் கேட்டு வருகின்றனர்,  ஆனால் மேயர் தேர்வு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து கூட்டணி கட்சிகளுக்கு கல்தா கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.  ஏற்கனவே அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்து மோதல் இருந்துவருவதாக   சொல்லப்பட்டு வரும் நிலையில். அதிமுக பிரமுகர் பாமக தலைவர்களை இழிவுபடுத்திப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!