அதிமுகவோட நிலைமை காமெடியா மாறி போச்சு... அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம்!!

By Narendran SFirst Published Jun 24, 2022, 9:28 PM IST
Highlights

அதிமுகவில் நடப்பதை மக்கள் கவனித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் நடப்பதை மக்கள் கவனித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த கவிஞர் கண்ணதாசன் 96 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மூப்பை சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞராக, தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன். அதிமுக பொதுக்குழு குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறியிருக்கிறது. நடக்கும் அத்தனையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். கொரோனா பரவல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் தொற்று இரட்டிப்பாகியுள்ளது. 50 சதவீதம் தொற்று அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரான் பொருத்தவரை பி ஏ -1 2 3 உள்ளிட்ட ஏழு வகையான தொற்று பரவி வருகிறது. தற்போது அதிகளவில் பிஎ 4, 5  வகைகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. மேலும் BA4, BA5 வைரஸ் தொற்று உயிர் கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1600 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது. குறிப்பாக 92% நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8 சதவீத நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

click me!