
சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினி, அரசியலுக்கு வந்தால் அவரது சிஸ்டமும் வீழ்ந்துவிடும் என்று அதிமுக எம்.பி வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார் .
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினி, அரசியலுக்கு வந்தால் அவரது சிஸ்டமும் வீழ்ந்துவிடும் என தெரிவித்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் போதாவிட்டால் கர்நாடகாவிடம் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.